டெல்லியில் கடும் பனிமூட்டம்: ரயில் மற்றும் விமான சேவை தாமதம்!

423

தலைநகர் டெல்லி உட்பட வட மாநிலங்களில் காலைவேளைகளில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது.

கடும் குளிரும் நிலவுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக டெல்லி சுற்று வட்டாரப்பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பனிப்படலமாக காட்சியளிக்கிறது.

இதனால் குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே சென்றதை காண முடிந்தது.

பனிமூட்டம் காரணமாக டெல்லிக்கு வர வேண்டிய ரயில்கள் தாமதம் ஆகின. 27 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. கடும் பனியால் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் ஓடுபாதையிலேயே  நிறுத்தி வைக்கப்பட்டது.

இருந்த போதிலும், எந்த ஒரு விமானமும் ரத்து செய்யப்படவில்லை.  டெல்லியில் காற்றின் தரமும் மோசமாக காணப்பட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of