தொடங்கியது பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு..! மீண்டும் எப்போது தெரியுமா..?

336

தமிழர்களின் திருநாள் என்று அழைக்கப்படும் பெங்கல் பண்டிகை அன்று 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுவதால், வெளியூரில் பணிபுரிபவர்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி அன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் ஜனவரி 10-ஆம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத்தீர்த்தது. ஆன்லைன் மூலம் நிறைய பேர் டிக்கெட்டுகளை புக் செய்ததால், வரிசையில் காத்துக்கொண்டிருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும், ஜனவரி 12-ம் தேதிக்கான முன்பதிவு, வரும் 14-ம் தேதியும், ஜனவரி 13-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 15-ம் தேதியும் செய்யலாம்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of