பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் காதலியுடன் போலீசில் தஞ்சம்..! காவல்நிலையத்தில் பரபரப்பு..!

597

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ராம் என்பவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வக்கீல் பயிற்சி பெற்று வருகிறார். பெண்ணாக பிறந்த இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டு, ஆணாக மாறினார்.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணிற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சரஸ்வதியின் பெற்றோர், இவர்களது காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், கோவையை அடுத்த சூலூர் பகுதியில் திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தனர். இதையடுத்து இருவரும் சூலூர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்திருந்தனர்.

இதற்கிடையே, வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் சரஸ்வதியை காணவில்லை என்று அவரது பெற்றோர் புகார் அளித்திருப்பது சூலூர் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் வில்லிவாக்கம் காவல்நிலையத்திற்கு சென்று ஆஜராகுமாறு, சூலூர் போலீசார் அறிவுறுத்தினர்.

இதையடுத்து காதல் ஜோடி அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது. பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் காதலியுடன் சூலூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of