ஒடிசாவில் களமிறங்கும் ‘திருநங்கை’

254

ஒடிசா மாநில சட்டசபைக்கான தேர்தலில் 147 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக கோரேய் தொகுதியில் காஜல் நாயக் என்ற திருநங்கை போட்டியிடுகிறார்.

ஜாஜ்பூர் பகுதியை சேர்ந்த காஜல் நாயக், திருநங்கையர் சங்கத்தலைவராகவும் சமூகச் செயற்பாட்டாளராகவும் உள்ளார். நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பி பல கட்சிகளை அணுகினேன். ஆனால், யாரும் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. என்னை வேட்பாளராக அறிவித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என காஜல் நாயக் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of