கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்

273
transport

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் அக்டோபர் 4ஆம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

சென்னை பல்லவன் இல்லத்தில், அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தொமுச, ஏஐடியூசி, சிஐடியூ உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் நிர்வாகிகள், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், அரசு அறிவித்தப்படி டீசலுக்கான மானிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும், போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள ஊதிய பற்றாக்குறையை அரசே முழுமையாக ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் அக்டோபர் நான்காம் தேதி கோட்டையை நோக்கி பேரணியாக சென்று முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.