குளித்துக்கொண்டே மோட்டார் சைக்கிளில் பயணம்… வீடியோ எடுத்த மக்கள்

219

வியட்நாம் நாட்டில் வாகனத்தில் செல்லும் போது இருவர் குளித்து கொண்டே செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைராலகி வருகிறது.

பின் டுவாங் மாகணத்தில் ஹூய்ன்தன் கான் (வயது 23), இவரும் இன்னொருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மேலாடை அணியாமல் வாகனத்தின் நடுவே ஒரு வாளியில் தண்ணீரை வைத்து கொண்டு பின்னால் இருந்த நபர் அவர் மீதும் வாகனம் ஒட்டியவர் மீதும் தண்ணீரை ஊற்றி கொண்டு அவரவர் சோப்பும் போட்டுக் கொண்டு வாகனத்தில் சென்றனர்.

இதை பார்த்த பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

அது மிக வேகமாக வைரலாகியது, அதை பார்த்த போலீசார் மோட்டார் சைக்கிளில் இருந்த நம்பரை வைத்து அவர்களில் ஒருவனை கண்டு பிடித்து போக்குவரத்து வீதிகளை மீறி செயல்பட்டத்தற்காக இருவருக்கும் தலா 80 டாலர்( சுமார் ரூ.5,600) அபராதம் விதித்தனர்.

அவர்களுக்கு மோட்டர் சைக்கிள் கொடுத்த நபருக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of