புதையலுக்காக நரபலி? கழுத்தறுக்கப்பட்ட நிலையில் 3 சடலங்கள்…

295

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் அனந்தபுர் மாவட்டம் கோர்திகோட்டா என்ற கிராமத்தின் அருகே ஒரு கோவில் உள்ளது.

இந்த கோவிலில் நேற்று 3 சடலங்கள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்தை பார்த்த உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பலியான மூன்று பேருமே 70 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

கொல்லப்பட்டவர்கள் 70 வயதான சிவராமி ரெட்டி அவரது 75 வயது சகோதரி கமலம்மா மற்றும் 70 வயதான சத்ய லக்‌ஷ்மம்மா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சத்ய லக்‌ஷ்மம்மா பெங்களூரை சொந்த ஊராக கொண்டவர்.

சிவராமி ரெட்டி உள்ளூர் கோவிலில் வேலை செய்து இருக்கிறார. கொலை தொடர்பாக தெளிவான காரணம் இன்னும் கிடைக்காத நிலையில் புதையலுக்காக மூவரும் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மூவருக்கும் கழுத்துப்பகுதியில் குறிப்பிட்ட அளவில்  வெட்டப்பட்டுள்ள தடம் இருந்துள்ளது. மேலும் அவர்களின் ரத்தம் கோவிலில் உள்ள சிலையின் மீது தெளிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் நரபலிக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

வேறு நோக்கத்திற்காக கொன்று போலீசாரை குழப்புவதற்கு சிலை மீது ரத்தம் தெளிக்கப்பட்டிருக்கலாம் என்றும் விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். முதற்கட்டமாக உள்ளூர் மக்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of