டுவிட்டரில் டிரெண்டாகும் #BIGILBiggestBBof2019

407

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்துள்ளார். மேலும் அப்பா – மகன் என்று இரண்டு தோற்றங்களிலும் விஜய் நடித்திருக்கிறார்.உலகம் முழுவதும் வெளியான இப்படம் 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததில் இது விஜய்யின் 7வது படமாகும்.

இதுவரை தீபாவளி தினத்தில் வெளியான துப்பாக்கி, கத்தி, மெர்சல், சர்கார், தற்போது வெளியான பிகில் ஆகிய படங்கள் அனைத்தும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

இப்படம்  வசூல் சாதனை படைத்துள்ளது என இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். தற்போது டுவிட்டரில் #BIGILBiggestBBof2019 என்கிற ஹேஸ்டேக் இந்தியளவில் டிரெண்டாகியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of