#தவிக்கும் தமிழ்நாடு: டுவிட்டரில் டிரெண்ட்

547

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடும் வறட்சி காரணமாக தண்ணீருக்கு மக்கள் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

குடி தண்ணீர் கேட்டு பல இடங்களில் பொது மக்கள் காலி குடங்களுடன் போராட்டம் நடத்துகின்றனர். பல கி.மீ., தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்

சென்னையில் அதிக விலை கொடுத்து வாங்க தயாராக இருந்தாலும் உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காத அவல நிலை உள்ளது. பல இடங்களில் தண்ணீருக்காக வெட்டு குத்து நடக்க துவங்கி உள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளமான டுவிட்டரில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து ‘ தவிக்கும்தமிழ்நாடு’ என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டது. இந்த ஹேஸ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது. ஏராளமானோர் அரசை விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளனர்.

தண்ணீர் தேடி மக்கள் அலையும் காட்சிகளையும், தண்ணீர் பிடிக்க லாரிகளை மக்கள் முற்றுகையிட்டுள்ள காட்சிகளையும் ,ஏரி, குளங்கள் வறண்ட காட்சிகள், தங்களது பகுதிகளில் நிலவும் தண்ணீர் பிரச்னைகள் குறித்தும் பதிவிட்டு வருகின்றனர்.