இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் எப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2020ம் ஆண்டின் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் கொல்கத்தாவில் நடக்கிறது.
இந்த ஏலத்திற்கு முன் 8 அணிகளும் தங்களுடைய வீரர்களை மற்ற அணிகளுக்கு விற்றுக் கொள்ளலாம். மற்ற அணிகளிடம் இருந்து வீரர்களை வாங்கிக் கொள்ளலாம். இரண்டும் இல்லை என்றால், வீரர்களை விடுவிக்கலாம். இதற்கான காலக்கெடும் நாளையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய டிரென்ட் போல்ட்-ஐ மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. போல்ட் 2014 ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனார். டெல்லி அணிக்காக 2018 மற்ம் 2019 சீசனில் விளையாடினார்.