லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி

722

திருச்சி சமயம்புரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த 12 பேர் காரில் திருச்சி நோக்கி சென்று

இவர்கள் சென்ற கார் இன்று அதிகாலை திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள், 3 பெண்கள், 3 ஆண்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதே பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement