கட்டை பையில் பெண் குழந்தை.. விக்கித்து போன திருச்சி.. விடியற்காலையில் பரபரப்பு

313

 

திருச்சி கே.கே.நகர் காஜாமலை முஸ்லீம் 2-வது தெருவை சேர்ந்தவர் ஷாஜகான். இவருக்கு வயது 47. இன்று காலை 5.30 மணிக்கு அவரது தெருவில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதே தெருவில் பேராசிரியர் ஒருவரின் வீட்டின் முன்பிருந்து அழுகை சத்தம் வந்ததால் அங்கே அருகில் சென்று பார்த்தார். அப்போது ஒரு கட்டை பையில் இருந்து சத்தம் வந்ததால், அதை திறந்து பார்த்தார்.

அப்போது, பிறந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தையை ரோட்டில் கொண்டு வந்து யாரோ போட்டிருப்பதை அறிந்த ஷாஜகான் உடனடியாக கே.கே.நகர் போலீசுக்கு தகவல் அளித்தார்.

விரைந்து வந்த போலீசாரும் குழந்தையை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தையை  கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சேவை குழந்தைகள் மையத்தில் பத்திரமாக போலீசார் ஒப்படைத்தனர்.

யார் கொண்டு வந்து குழந்தையை போட்டிருப்பார்கள், குழந்தை யாருடையது என்றெல்லாம் விசாரணை நடத்தி வருகின்றனர்..

 

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of