திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழை

209

தமிழகத்தில் திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம், செங்கம், போளுர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை, பேராவூர் தேவிபட்டினம், வழுதூர், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதேபோன்று திருச்சி மாவட்டம் மத்திய பேருந்து நிலையம், உறையூர், தில்லைநகர், விமான நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of