மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞருக்கு சரமாரி அடி உதை

279
tiruppur

திருப்பூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பியோடிய மூன்று இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்று பாலத்தின் அடியில் நான்கு இளைஞர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பித்து பாலத்தின் மேற்பகுதிக்கு ஓடிவந்துள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவரை மடக்கி பிடித்தனர். அந்த இளைஞரை சரமாரியாக அடித்து உதைத்த பொதுமக்கள் பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here