‘மம்தா பானர்ஜி-யை பயமுறுத்தும் மோடி’.., 40 எம்.எல்.ஏக்களும் என்னுடன்

847

அனல் பறக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. இன்று 4 ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தேர்தல் நடக்காமல் மீதமுள்ள தொகுதிகளுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வகையில் மோடி மேற்கு வங்காள மாநிலம் செராம்பூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,

மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவு வரும்போது தாமரை எல்லா இடங்களிலும் மலரும். உங்கள் எம்.எல்.ஏக்கள் உங்களை விட்டு விலகி விடுவர். இன்றுவரை திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். என தெரிவித்தார்.

இவரின் இந்த பேச்சி அரசியில் வட்டாரங்கிளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement