சட்டவிரோத செயல்கள் தடுப்பு மசோதா கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது – திரிணாமுல் காங்கிரஸ்

221

சட்டவிரோத செயல்கள் தடுப்புத் திருத்தச் சட்ட மசோதா கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மக்களுக்கும் எதிரானது என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து மக்களைவில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொய்திரா, இந்த சட்ட திருத்தம் அரசியல் எதிரிகளை பழிவாங்க தவறாக பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அரசிடம் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால், ஒவ்வொருமுறையும் தேச விரோதி என்ற பட்டமே கிடைக்கிறது என்று விமர்சனம் செய்தார்.

அரசை எதிர்த்தால், அது எப்படி தேச விரோதமாக பார்க்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், அரசை எதிர்த்தாலும் இந்தியாவை நேசிக்க முடியும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of