”காலாவதி பிரதமரே.. குதிரை பேரம் நடத்துறீங்களா?” – திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி

667

40 எம்எல்ஏ-க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளார்கள் என்று பிரதமர் மோடி கூறியதற்கு, திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. 

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்தில் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ‘‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏ-க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்’’ என்று பிரதமர் மோடி பேசினார்.

இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மோடி பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான தெரிக் ஓ’பிரைன் கூறுகையில் ‘‘காலாவதியான பிரதமர், உங்களுடன் ஒருவர் கூட வருமாட்டார்கள். ஒரு கவுன்சிலர் கூட வரமாட்டார்.

நீங்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறீர்களா? அல்லது குதிரை பேரம் நடத்துகிறீர்களா?. உங்களுடைய காலாவதி தேதி விரைவில் வருகிறது. நீங்கள் குதிரை பேரம் நடத்துவதாக இன்று நாங்கள் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்துள்ளோம்’’ என்றார். #Modi #TMC

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of