அதிரடி ஆக்சன் படத்தில் இணையும் பேட்ட நாயகி

536

96 படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ‘திரையுலக மார்கண்டேயி ’யாக உருமாறியிருக்கிறார் த்ரிஷா. அவர் அடுத்ததாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் சாகசங்கள் நிறைந்த ஆக்சன் படத்தில் நடிக்கிறார். இவருடன் நடிகை சிம்ரனும் இணைந்து நடிக்கிறார். இப்படத்தை ‘சதுரம் 2’ படத்தை இயக்கிய சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.இதுகுறித்து படத்தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா பேசுகையில்,

இந்தியாவில் முதன்முறையாக ஆழ்கடல் சாகசங்களும், ஆக்சன் காட்சிகளும் நிறைந்த படமாக இப்படம் தயாராகிறது. அத்துடன் ரசிகர்களுக்கு வேறு சில சுவராசியமான விசயங்களும் காத்திருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதன் படப்பிடிப்பு சென்னை, பிச்சாவரம், கேரளா, தாய்லாந்து ஆகிய பகுதிகளில் படமாக்க திட்டமிட்டுள்ளோம். சிம்ரனுக்கும், திரிஷாவிற்கும் கடல் சார்ந்த சாகசங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களைத் தவிர மற்ற நடிகர்கள், நடிகையர்களின் தேர்வும், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடைபெற்று வருகிறது.” என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of