சந்தித்த உடனே திருமணம் தான்.., திரிஷா ஓபன் டாக்

777

தமிழ் திரையுலக ரசிகர்களை மட்டுமின்றி தெலுங்கு ரசிகர்களையும் தன்னுடைய குழந்தை சிரிப்பாலும், எதார்த்த நடிப்பாலும், மின்சார பார்வையாலும் ’96’ முதல் 16 வரை அனைத்து விதமான ரசிகர்களையும் கொள்ளைக்கொண்டு அதன் மூலம் அழியாத கோட்டை கட்டி அதில் யாராலையும் அழிக்கமுடியாத மகாராணியாக இருப்பவள். அவளே ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் எவர்கிரின் ‘திரிஷா’… இவர் பெயரை சொன்னாலே பலருக்கு ஷாக் அடிக்கும் அந்த அளவிற்கு அன்றும், இன்றும், என்றும் சரி முன்னனி நடிகையாக மட்டுமின்றி அனைவரின் கனவு கன்னியாகவும் நிலைத்து நிற்கின்றாள்.திரிஷா திருமணம் பற்றி அடிக்கடி பல கிசுகிசு வந்து கொண்டுதான் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு பாகுபலி படத்தின் வில்லனான ராணாவை காதலிப்பதாக திரையுலகில் கிசுகிசு பரவின.

அதன் பின்னர் திரிஷாவுக்கும் தயாரிப்பாளர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அந்த திருமணம் சில காரணங்களால் ரத்து செய்துவிட்டு தன்னுடைய முழு கவனத்தையும் நடிப்பில் காட்ட தொடங்கினார்.

இந்நிலையில், திருமணம் பற்றி அவரிடம் கேட்டபோது அதற்கு, “இப்போதைக்கு நான் யாரையும் காதல் செய்யவில்லை. ஆனால், எனக்கான சரியானவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயார்” என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of