“இதுக்குத்தான் வெளியேற்றப்பட்டார்..?” கமலை ஒருமையில் பேசிய சரவணன்..! வைரலாகும் வீடியோ..!

2892

பிக்-பாஸ் சீசன் 3 மற்ற சீசன்களை விட அதிக விறுவிறுப்புடனும், காரசாரமாகவும் நடந்து வருகிறது. இந்த சீசனில் பிக்-பாஸ் குழுவினர் வித்தியாசமான strategy-ஆ கையாண்டு வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பான எபிசோட் ஒன்றில், பெண்களை இடிப்பதற்காக பஸ்சில் ஏறியிருக்கிறேன் என்று சரவணன் கூறியிருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனை காரணம் காட்டி, பிக்-பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இவர் அதற்காக வெளியேற்றப்படவில்லை, அதற்கு இது தான் காரணம் என்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், கமல் சக போட்டியாளர்களிடம் கேள்வி கேட்டு வருகிறார். அதனை பார்த்த சரவணன், ஏய் அவன் கோர்த்து விடுகிறான் டா என்று சேன்டியிடம் கூறுவதாக உள்ளது.

கமலை ஒருமையில் பேசியதால் தான் சரவணன் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று இந்த வீடியோவை காரணம் காட்டி ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். எது என்னவோ சனிக்கிழமை தான் சரவணன் எதற்காக வெளியோற்றப்பட்டார் என்பது தெரியும்.

Advertisement