டிரம்ப்-கிம் வியட்நாமில் மீண்டும் சந்திப்பு

534

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே சிறு மோதல் இருந்து
வந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடன் சில மாதங்களுக்கு முன்பு அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கிவைத்தார்.இந்நிலையில், இன்று நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சிறப்புரையாற்றிய டிரம்ப், மாபெரும் திருப்பமாக உலக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்பட்ட எங்களின் (டிரம்ப்-கிம்) சந்திப்பு மீண்டும் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

இச்சந்திப்பு வருகின்ற பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் வியட்நாமின் தலைநகரான ஹனாயில் நடைபெற உள்ளது என குறிப்பிட்ட அவர், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடம் அணு ஆயுதங்கள் அனைத்தையும் கைவிட வலியுறுத்துவோம் என கூறினார்.

இந்த சந்திப்பு மூலம் அமெரிக்க-வடகொரியா இடையே அமைதியும், நல்லுறவும் மேம்படும் என உலக அரசியல் நோக்கர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of