டிரம்ப் தேர்வு செய்த இந்திய அமெரிக்க நீதிபதி | Anuraag Singhal

1058

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தெற்கு மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாக செயல்பட்டு வருபவரின் பதவிக்காலம் முடிவுறும் நிலையில் அந்த இடத்துக்கு இந்திய அமெரிக்கரான அனுராக் சிங்கால் என்பவரை ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.

அனுராக் சிங்காலுக்கு அமெரிக்க செனட்சபை ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் புளோரிடா தெற்கு மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாகும் முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

1963-ம் ஆண்டு நியூஜெர்சி மாகாணத்தில் பிறந்த அனுராக் சிங்கால், 1986-ல் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். அதனை தொ டர்ந்து, 1989-ம் ஆண்டில் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை படித்து முடித்தவர்.