ஏப்ரல் மாத இறுதிக்குள் கொரோனாவுக்கு மருந்து – டிரம்ப் நம்பிக்கை

522

ஏப்ரல் மாத இறுதிக்குள் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாத எதிரி என்றும், அதனை அழித்தே தீருவோம் என்றும் அவர்  தெரிவித்தார்.

கொரோனாவை ஒழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் சோதனை துவங்கியுள்ளோம் என்றும் டிரம்ப் கூறினார்.

மருந்து தயாரிப்பு மற்றும் மருத்துவ தொழில் நிறுவனங்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், ஏப்ரல் இறுதிக்குள் கொரோனா வைரசுக்கான மருந்து தயாராகி விடும் என்றார்.

நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்களுக்கு 15 அறிவுரைகள் வழங்கியுள்ளதாகவும், பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை கோவிட் 19 வைரஸ் ஏற்படுத்தி இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

நியூயார்க் துறைமுகத்தில் ராணுவ மருத்துவமனை கப்பல் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of