தாஜ்மஹாலை மனைவியுடன் கண்டு ரசித்த ட்ரம்ப்..!

250

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது மனைவியுடன் கண்டு ரசித்தார்.

அகமதாபாத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப், அங்கிருந்து ஆக்ரா புறப்பட்டார். ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு சென்ற அதிபர் டிரம்ப், தனது மனைவி மெலானியாவுடன், தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதேபோன்று டிரம்பின் மகள் இவாங்கா, மருமகன் ஜார் குஷ்னர் ஆகியோரும் தாஜ்மஹாலை கண்டு ரசித்தனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட டிரம்ப், அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது என்றும், அமெரிக்க மக்கள் எப்போதும் இந்தியாவுக்கு உண்மையாகவும், நட்பாகவும் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of