செய்தியாளர்கள் சந்திப்பு.. துப்பாக்கிச்சூடு.. உடனடியாக வெளியேறிய டிரம்ப்..

548

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில்  வெள்ளை மாளிகை அமைந்துள்ளது. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் என்பதால் வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும்.

இந்த சூழலில், வெள்ளை மாளிகை பகுதி அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர்  ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட சீக்ரெட் சர்வீஸ் எனப்படும் ரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட டிரம்ப், துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும் பாதியிலேயே வெளியேறினார்.

சிறிது நேரம் கழித்து பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப்,  வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஒரு நபரை தவிர வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறினார்.

Advertisement