காந்தி நினைவிடத்தில் மரம் நட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..!

180

டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அங்கு ஒரு மரக்கன்றினை நட்டு வைத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற அரசு முறை வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, செலுத்திய யில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா இருவரும் இன்று காலை வந்தனர்.

காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்துவிட்டு, நினைவிடத்தை சுற்றி வந்த டிரம்ப் – மெலானியா மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தங்கள் வரவைப் பதிவு செய்யும் வகையில் ராஜ்காட்டில் ஒரு மரக்கன்றினை நட்டு வைத்தனர் டிரம்ப் – மெலானியா தம்பதியர்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று வந்த நிலையில், இன்று காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார்.

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் வருகையாளர் பதிவேட்டில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

நேற்று சபர்மதி ஆசிரமத்தில் வைத்திருந்த விருந்தினர் பதிவேட்டில், ஆசிரமம் பற்றியோ, காந்தியைப் பற்றியோ எழுதாமல், பிரதமர் மோடியைப் பற்றி எழுதியிருந்தது நேற்று சர்ச்சையான நிலையில், இன்று அவரது நினைவிடத்தில் இருக்கும் விருந்தினர் பதிவேட்டில் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of