“நீயா இப்படி சொன்னது..” டிரம்பை விளாசிய சகோதரி..! அமெரிக்காவில் பரபரப்பு..!

837

அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்பின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் இவருக்கு போட்டியாக ஜோ பெய்டன் போட்டியிடுகிறார்.

துணை அதிபர் பதவிக்காக, கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அந்நாட்டில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டிரம்ப் பற்றி அவரது சகோதரி பேசிய ஆடிய பதிவுகள் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில், தனது தம்பியை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், பென்சைல்வேனியா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் டிரம்ப் ஆள்மாறாட்டம் செய்து தான் தேர்ச்சி பெற்றதாக அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார்.

மேலும், டிரம்ப் கொடூரமானவர், பொய்யர், கொள்கை இல்லாதவர் என்றும் அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

டிரம்பின் சகோதரியே அவரைப்பற்றி மிகமோசமாக பேசிய சம்பவம் அமெரிக்க தேர்தலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருமா..? அல்லது வெடிக்காத பட்டாசாக மாறுமாஎன்பது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் தெரியும்..