“யாரா இருந்தா என்ன..” அதுக்கு மட்டும் டிரம்புக்கு அனுமதி கிடையாது..! உ.பி. அரசு அதிரடி..!

560

வெளிநாட்டைச்சேர்ந்த தலைவர்கள் நம் நாட்டிற்கு வரும்போது, தடபுடலாக ஏற்பாடுகளை செய்வது வழக்கம். சமீபத்தில் கூட சீன அதிபர் மாமல்லபுரத்திற்கு வந்திருந்தபோது, பலவிதமான கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார். இதனால் கலை நிகழ்ச்சிகள், பாதுகாப்பு ஏற்பாடு என பல்வேறு கோடிகளுக்கு மேல் மத்திய அரசு செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, அதிபர் டெனால்ட் டிரம்ப், ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை காண உள்ளார். மேலும், தி பீஸ்ட் என்ற சிறப்பு காரில் தான் இந்தியாவில் டிரம்ப் வலம் வர இருக்கிறார்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சிறப்பு காரில் தாஜ்மஹால் அருகே செல்ல முடியாது என்று உத்தரபிரதேச நிர்வாகம் அமெரிக்க ரகசிய சேவைக்கு தெரிவித்துள்ளது.

காருக்கு பதிலாக, டொனால்ட் டிரம்ப், மெலனியா டிரம்ப் இருவரும், உ.பி. அரசு வழங்கும் இ-வாகனத்தில்தான் அங்கு செல்ல முடியும். இந்த இ-வாகனங்கள் குறித்து அமெரிக்க ரகசிய சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்திலிருந்து வெளியேறும் மாசு நினைவுச்சின்னத்தை சேதப்படுத்தகூடாது என்பதற்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of