வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான இந்தியா,சீனாவுக்கு மானியம் நிறுத்தப்படும் – டிரம்ப்

968

வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான இந்தியா மற்றும் சீனாவுக்கு மானியம் நிறுத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிகாகோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப், சில நாடுகளை வளரும் பொருளாதார நாடுகள் என கூறி வருகிறோம் என்றும் அதனால் அந்நாடுகளுக்கு நாம் மானியம் வழங்கி வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தங்களை வளர்ந்து வரும் நாடுகள் என கூறி வரும் நிலையில், அந்நாடுகளுக்கும் நிதி வழங்குகிறோம் என்றும், இது முற்றிலும் பைத்தியக்காரத்தனம் மிக்கது என தெரிவித்தார்.

இந்தியா, சீனா நாடுகளுக்கான மானியம் வழங்குவது நிறுத்தப்படும் எனவும் . மற்ற நாடுகளை விட நாமும் வேகமாக வளர போகிறோம் எனவும் டிரம்ப தெரிவித்தார்.

Advertisement