நாட்டு மக்களை பிரித்து ஆதாயம் தேட முயற்சி – காங்ககிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

636

பா.ஜ.க மக்களை இணைப்பதாகவும் ஆனால் காங்கிரஸ் கட்சி மக்களை பிளவுபடுத்த நினைப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

செல்போன் செயலி மூலம் பா.ஜ.க.வினருடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மக்களை பிளவுபடுத்தி ஆதாயம் காண முயற்சிப்பதாக தெரிவித்தார். பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து நாட்டு மக்களை தவறான பாதையில் வழி நடத்துவதாக கூறினார்.

ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா உருவாக்கப்பட்டதை சுட்டிக் காட்டிய அவர், ஒரே மொழி பேசும் மக்களை இரு மாநிலத்தவராக மாற்றியது காங்கிரஸ் கட்சிதான் என்று குற்றம்சாட்டினார். மேலும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி ஒரு தோற்றுப்போன திட்டம் என்றும் பிரதமர் மோடி விமர்சித்தார்.

Advertisement