பொது தேர்வில் முறைகேட்டை தடுக்க முயற்சி

125

தமிழகத்தில் மார்ச்,2-ல்பொது தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடக்காதவாறு அதற்கான நடவடிக்கைளை பள்ளிகல்வி துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

இப்பணியில் செயலாற்ற போகும் ஆசிரியர்களுக்கும், வினா,விடைத்தாள் எடுத்து செல்லும் ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் 2500க்கும் மேற்பட்ட தேர்வுமையங்களில் எட்டு லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

இதற்கான முன்னேற்பாடு பணிகள தீவிரம் அடைந்துள்ளது. இப்பணியில் பணியாற்றும் தேர்வறை கண்காணிப்பாளர், தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளர், வினாத்தாள் மற்றும்முதன்மை விடைத்தாள் கட்டுக்காப்பு மைய பொறுப்பாளர், வினா, விடைத்தாளை வாகனங்களில் எடுத்துச் செல்லும் அலுவலர் உள்ளிட்ட, பல்வேறு பொறுப்புகளில் ஆசிரியர்களும், பள்ளி கல்வி ஊழியர்களும் நியமிக்கப்படுகின்றனர்.

இந்த பணிகளை, முதன்மை கல்வி அதிகாரிகளின் உத்தரவுபடி, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு உள்ளனர். ஆசிரியர்கள், அவரவர் சொந்த பள்ளிகள் மற்றும் சொந்த கல்வி மாவட்டங்களில், பணி அமர்த்தக் கூடாது என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு பணி ஒதுக்கீட்டில், மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of