TTV-க்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது – இந்திய தேர்தல் ஆணையம்

472
ttv-cooker

TTV தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் TTV தினகரன் மேல்முறையீடு செய்திருந்தார்.

மார்ச் 14-ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதிகள், குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து இன்று பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, TTV தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதில் அளித்தது.

மேலும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே பொதுச் சின்னம் வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து குக்கர் சின்னத்தை ஏன் ஒதுக்கமுடியாது என்பதை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு நாளைக்கு ஒத்திவைத்தனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு டிடிவி தினகரனுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of