ஊழல்களின் தலைவன் டி.டி.வி தினகரன் – தங்கமணி

900

ஊழல்களின் தலைவன் டி.டி.வி தினகரன் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தினகரனால் தான் ஜெயலலிதாவுக்கு அவப்பெயரும் வழக்குகளையும் சந்திக்க நேரிட்டது என கூறினார்.

தங்களை ஊழல்வாதிகள் என்று கூறும் டிடிவி தினகரன் தான் ஊழல்களின் தலைவன் என்று தெரிவித்த அமைச்சர் தங்கமணி, அதன் காரணமாக தான் ஒரு வருடகாலம் சிறை தண்டணை பெற்றதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தினகரன் திமுகவுடன் கூட்டு சேர்ந்து எப்படியாவது இந்த ஆட்சியை கலைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

ஆட்சியை கலைக்கும் முயற்சியை நிறுத்திவிட்டு ஒன்றிணைந்து திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிபெற்று மீண்டும் கட்சியை ஜெயலலிதா வழியில் சிறப்பாக வழிநடத்துவோம் என்ற தினகரனுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அழைப்பு விடுத்தார்.