புகழேந்தி தான் 24ம் புலிகேசி – டிடிவி. தினகரன் | TTV Dhinakaran

639

பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்தார். அதன்பின், இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழேந்தி சந்தித்தது குறித்து கேட்டனர்.

இதற்கு பதிலளித்த தினகரன், கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும். புகழேந்தி 24-ம் புலிகேசியாய் உருவாகி இருக்கிறார். அவர் அ.தி.மு.க.வில் இருக்கிறாரா? அ.ம.மு.க.வில் இருக்கிறாரா? என அவர் கூறவேண்டும்.

மேலும் சிறையிலிருந்து சசிகலா விரைவில் வெளியே வருவார். அதற்கான சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.

Advertisement