பயத்தின் காரணமாக தான் முதல்வர் இவ்வாறு செய்கின்றார்

300

பயத்தின் காரணமாகவே, முதல்வர் பழனிசாமி யாரிடமும் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,முதலமைச்சர் பழனிசாமியின் வெளிநாடு பயணம் தமிழகத்திற்கு முதலீட்டைடை அதிகபடுத்தினால் நல்லது என்றும் ஆனால் இது அரசியலாக இருக்க கூடாது எனவும் கூறினார். ஆளும் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்த கட்சியாக இருந்து வருகிறது என்று விமர்சித்த தினகரன், ஆட்சி இருப்பதால் அதிமுக மூட்டை போல உள்ளது என்றும், பிரித்து பார்த்தால் அதன் உண்மை நிலவரம் தெரியும் எனவும் தெரிவித்தார்.

அமமுக கட்சியை பதிவு செய்து ஒரே சின்னத்தை பெற முயற்சி செய்து வருகிறோம், அப்படி ஒரேசின்னத்தை பெற்றவுடன் தேர்தலை சந்திப்போம் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

Advertisement