தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் செல்லவேண்டியது தானே..? – முதல்வரை சாடும் டிடிவி

629

ஜா புயல் பாதிப்பை ஹெலிக்காப்டரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி, வாக்கு சேகரிக்கவும் ஹெலிக்காப்டரிலேயே செல்ல வேண்டியது தானே என அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார்.

நாகை மக்களவை தொகுதி வேட்பாளர் செங்கொடி மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.காமராஜை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க-வுடன், அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது.

மானங்கெட்ட கூட்டணி என தெரிவித்தார். கஜா புயல் பாதிப்பை ஹெலிக்காப்டரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி, வாக்கு சேகரிக்கவும் ஹெலிக்காப்டரிலேயே செல்ல வேண்டியது தானே என கூறினார்.

வரும் காலத்தில் இன்னொரு புயல் வீசினால் டெல்டா மக்கள் கையேந்தாமல் இருக்க பரிசு பெட்டகத்துக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of