பொள்ளாச்சி வழக்கு – அரசாணையில் மாணவியின் பெயர்…. – ஈபிஎஸ் அரசு மீது டிடிவி கடும் பாய்ச்சல்

1042

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கும் அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும்,படிக்கும் கல்லூரியின் பெயரையும் குறிப்பிட்டிருப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது;

தமிழ் நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் மனசாட்சியை மொத்தமாக கழட்டிவைத்துவிட்டு பழனிச்சாமி அரசு அடுத்தடுத்த அக்கிரமங்களை செய்து வருகிறது. அதில் ஒன்றாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கும் அரசாணையில் புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர்,அவர் படிக்கும் கல்லூரி ஆகியவற்றைக் குறிப்பிட்டிருப்பது இதுவரை எப்போதுமே நடந்திராத மிக மோசமான செயல்.

பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்கள் பற்றிய விவரங்களை வெளியிடக்கூடாது என்று உலகம் முழுக்க கடைப்பிடிக்கப்படும் நெறிமுறைகளையும்,உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைகளையும் பழனிச்சாம் அரசு காலில் போட்டு மிதித்திருக்கிறது. ஏற்கனவே அந்தப் பெண்ணின் பெயரை காவல்துறை வெளியிட்டு இவ்விகாரத்தில் புதிய புகார்கள் வருவதைத் தடுத்திருக்கிறது.

இப்போது அரசாணையிலேயே பாதிக்கப்பட்ட பெண்ணின் வெளிப்படையாக குறிப்பிட்டு பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைப்பற்றி புகார் தருவதைத் தடுக்கும் வகையில் செயல்படும் பழனிச்சாமி அரசை வன்மையாகக்கண்டிக்கிறேன். என்ன நினைத்துக்கொண்டு இவ்வளவு பட்டவர்த்தமாக எல்லாவற்றையும் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல; அவர்களைக் காப்பாற்றத் துடிப்பவர்களுக்கும் நிச்சயம் தண்டனை உண்டு.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ttv pressmeet

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of