விரைவில் தேர்தல் அறிக்கை – டிடிவி அதிரடி

88

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையை வரும் மார்ச் 22ம் தேதி வெளியிட உள்ளதாக அக்கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் டிடிவி தினகரன். அப்போது அவர் கூறியதாவது:

தேனி என்னுடைய பழைய தொகுதி. ஏன் நானே வேண்டுமானாலும் அங்கே நிற்கலாமே? நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் நகர செயலாளர் எல்லோருமே தேனி மாவட்டத்தில் நான் போட்டியில் தேனி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியலில் என்னை ஜெயலலிதா அறிமுகப்படுத்திய தொகுதி தேனி.

எங்களுக்கு இறை நம்பிக்கையும், நாள், கிழமைகளில் நம்பிக்கையும் உண்டு. இதனடிப்படையில் வேட்பாளர் பட்டியல், பெயர் உள்ளிட்டவற்றை நாங்கள் ஏற்கனவே தீர்மானித்து தான் வெளியிட்டு வருகிறோம்.