சசிகலாவின் பேச்சைக் கேட்டு தினகரன் எடுத்த முடிவு! உற்சாகத்தில் நிர்வாகிகள்!

1615

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய அளவில் பாஜக பெரும் வெற்றியை பெற்றது. தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மொத்தமுள்ள 40 இடங்களில் 38 இடங்களில் அபார வெற்றி பெற்றனர்.

குறைந்தது 5 இடங்களையாவது பெறுவார் என்று கணிக்கப்பட்ட அமமுக –கட்சி பல இடங்களில் 4 இடத்தை பிடித்து படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து அமமுக கட்சியில் இருப்பவர்கள், திமுக மற்றும் அதிமுக –வில் இணைய ஆரம்பித்து வருகின்றனர்.

செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து தங்கத்தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார். இதேபோல் அமமுவின் அமைப்பு செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்னசபாபதி, பிரபு உள்ளிட்டோரும் அதிமுகவுக்கு திரும்பி விட்டனர்.

இதேபோல் அமமுகவின் பல்வேறு நிர்வாகிகள் கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் அதிரடி முடிவை எடுத்துள்ளார். அது என்னவென்றால், கட்சியில் இருந்து அதிருப்தி நிர்வாகிகள் வெளியேறுவதை தடுக்க அவர்களுக்கு புதிய பதவி கொடுக்க தினகரன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 3ம் தேதி பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி.தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகுவது குறித்து விவாதித்தாக தெரிகிறது.

அப்போது சசிகரலா, கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள். இனி கட்சியை விட்டு யாரும் செல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள் என அறிவுரை கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் இந்த முடிவை இவர் எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisement