தினகரனிடம் ஆதங்கத்துடன் சசிகலா கேட்ட கேள்வி!

1116

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து ஒவ்வொரு நிர்வாகிகளாக விலகிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

கடந்த வாரத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் அ.ம.மு.க கொள்ளைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன். கொள்கையே இல்லாத கட்சியில் கொ.ப.செ பதவி எதற்கு? எனத் தினகரனைக் காட்டமாக விமர்சித்துவிட்டு, அறிவாலயத்தில் ஐக்கியமானார்.

அவரைத் தொடர்ந்து அ.ம.மு.க அமைப்புச் செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா, அப்பதவியில் இருந்து விலகவிட்டார்.

இந்தநிலையில், அக்ரஹாரா சிறையில் இன்று சசிகலாவைச் சந்தித்துப் பேசினார் தினகரன். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், நிர்வாகிகள் மாற்றுக்கட்சியில் சேர்வதற்கான காரணங்கள் குறித்து சசிகலா ஆதங்கத்துடன் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு நிதானமாக சில காரணங்களையும் தினகரன் சொல்லி  இருக்கிறாராம். மேலும், சசிகலா, சிறையில் இருந்து வெளியே வருவதற்கான வேலைகளும் நடந்துக் கொண்டு இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement