திமுக பயில்வான் கூட்டணி! பாமக மானங்கெட்ட கூட்டணி! டிடிவி பேச்சு!!

614

பாராளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக, திமுக கூட்டணிகள் இறுதியாகி விட்டன. அமமுக தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளது.

மற்ற கட்சிகளும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அமமுக துணைப் பொது செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அப்போது அவர் பேசியதாவது:

“இடைத்தேர்தல் வந்தால் தேர்தல் ஆணையம் சின்னம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அதிமுகவின் ஒரு பிரிவுதான் அமமுக. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை கட்சியின் பெயரை எப்படி பதிவு செய்ய முடியும்? அதிமுக மீதான உரிமைக்காக போராடும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் கட்சியை பதிவு செய்யவில்லை.

தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி வைக்க கூட அதிமுக தயங்காது. திமுக ஒரு பயில்வான் கூட்டணி… பாமக மானங்கெட்ட கூட்டணி.”

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of