நான் மாத்தி பேசினேனா? – கேள்வியெழுப்பிய டிடிவி தினகரன்

337

நான் அப்போது ஒன்றும் இப்போது ஒன்றும் பேசினால் நீங்கள் தாராளமாக கேள்வி எழுப்பலாம். ஆனால் நான் அவ்வாறு மாற்றி பேசினேனா என பத்திரிகையாளர்களிடம் டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தேர்தல் கூட்டணி தொடர்பாக மேலும் இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இருட்டில் செல்பவர்கள் தான் துணைக்கு 4 பேரை அழைத்து செல்வார்கள் என்றும் அது போன்று தான் அதிமுகவும் என்று கூறினார். ஜெயலலிதாவை அவமரியாதையாக பேசியவர்களுடன் இன்று அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளதாக விமர்சித்தார்.

நான் அப்போது ஒன்றும் இப்போது ஒன்றும் பேசினால் நீங்கள் தாராளமாக கேள்வி எழுப்பலாம். ஆனால் நான் அவ்வாறு மாற்றி பேசினேனா? என பத்திரிகையாளர்களிடம் கேள்வியெழுப்பினார்.

அதிமுக மக்களை நேரடியாக சந்திக்க பயப்படுவதாக தெரிவித்த தினகரன், வரும் தேர்தலில் தமிழக மக்கள் புதிய கணக்கு எழுதுவார்கள் என்று கூறினார். தற்பொழுது SDPI கட்சியுடன் கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் மேலும் இரண்டு கட்சிகளுடன் கூட்டணிகுறித்து பேசி வருவதாக தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of