அமமுக கட்சியாக பதிவு! டிடிவிக்கு கிடைத்த புதிய பதவி! ஷாக்கின் உச்சத்தில் தொண்டர்கள்!

653

அதிமுகவில் இருந்து 18 எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்ற டிடிவி தினகரன் ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்எல்ஏவாக மாறினார். அதன்பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை டிடிவி தினகரன் மிக பிரம்மாண்டமாக ஆரம்பித்தார்.

ஆனால் இந்த இயக்கம் அரசியல் கட்சி இல்லை என்றும் அதிமுகவின் மாற்று அணி தான் என்றும் அப்போது கூறினார். இதற்கிடையே மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்லில் அமமுகவுக்கு ஒரே சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கைவிரித்தது.

இதனால் நீதிமன்றத்தில் போராடிய தினகரனிடம், கட்சியை பதிவு செய்தால் தான் ஒரே சின்னம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. எனினும் பரிசுப்பெட்டி சின்னம் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தினகரன் அணிக்கு கிடைத்தது.

ஆனால் ஒரே சின்னம் வழங்கப்பட்டாலும், இவர்கள் அனைவரும் சுயேட்சைகளாகவே கருதப்படுவர் என உச்சநீதிமன்றம் அன்றைக்கு தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டு இருந்தது. இதன் காரணமாக தேர்தல் முடிந்த கையோடு தனது அமமுக இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற தினகரன் முடிவு எடுத்துள்ளார்.

இதன்படி அடுத்த ஒரு வாரத்தில் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடிவுசெய்துள்ளார். இந்நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் அமமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக சசிகலாவை தினகரன் பொதுச்செயலாளர் என அறிவித்து இருந்த நிலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.