இரட்டை இலை துரோகத்தின் சின்னம்! டிடிவி தினகரன் கடும் தாக்கு!

513

கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இருகூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லை. அதனால் தான் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தை ஆண்டுகொண்டு இருக்கிற பழனிச்சாமி அண்டு கம்பெனியின் துரோகத்தால் தமிழகமே தலைகுனிந்து வெட்கப்படுகிறது. சிறைச்சாலை சென்று, சகோதரியாய், தாயாய் நின்று முதல்வராக்கியவருக்கே துரோகம் செய்தவர்கள். இவர்கள் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று எல்லா மாநில மக்களும் கேட்கிறார்கள்.

சசிகலா சிறைக்கு சென்ற போது, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்குங்கள் என்று சொன்னதால் தான் அவர் வெற்றி பெற்றார். ஆனால் பதவியில் அமர்த்தியவர்களுக்கே துரோகம் செய்யும் வகையில் அவரது நடவடிக்கைகள் இருப்பதால், ஆட்சி அதிகாரத்திலே இருக்க யாருக்கும் துரோகம் செய்யலாம் என அவர்கள் வந்துவிட்டதால், அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

ஆர்கே நகரில் இரட்டைஇலை அம்மாவின் சின்னம் அல்ல, அது துரோகத்தின் சின்னம் என மக்கள் எப்படி தோல்வியை தந்தார்களோ அதுபோல் தர வேண்டும்”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of