வேலூர் தேர்தலில் யாருக்கு ஆதரவு…? டிடிவியின் பரபரப்பு பதில்..!

539

கடந்த மக்களவை தேர்தலில் திமுக கட்சி அபார வெற்றி பெற்றது. தமிழகம் புதுவை சேர்த்து 39 இடங்களில், 38 இடங்களை திமுக கைப்பற்றியது. பணப்பட்டுவாடா அதிகம் நடைபெறுவதாக கூறி, வேலூரில் மட்டும் தேர்தல் நடைபெறாமல் தேர்தல் ஆணையத்தின் மூலம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து வேலூரில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை, கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் அமமுக சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு, நிர்வாகிகளிடையே சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், விவசாயிகள், விவசாய நிலங்கள், காடுகள், நீர்ஆதாரங்களை அழித்துதான் ஒரு ரோடு உருவாக்கி நாடு முன்னேற வேண்டும் என்று அவசியம் இல்லை.

அதனால் 8 வழிச்சாலை திட்டம் கைவிடபட்டு ஏற்கனவே இருக்கின்ற சாலைகளை அகலபடுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்று கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of