டி.டி.வி.தினகரனின் கூடாரம் 4 நாட்களில் காலியாகும்

316

4 நாட்களில் டி.டி.வி.தினகரனின் கூடாரம் காலியாகும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் உண்மை நிலையை உணர்ந்து மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பி வருவதாக கூறினார். அ.ம.மு.க கூண்டோடு காலியாகும் என்று 2 வாரங்களுக்கு முன்பு தான் சொன்னதாக குறிப்பிட்ட அவர், தற்போது அது தொடங்கி உள்ளதாக தெரிவித்தார். இன்னும் 4 நாட்களில் டி.டி.வி.தினகரனின் கூடாரம் முற்றிலும் காலியாகும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.