ஜெயலலிதாவை தவறாக பேசியவர்களுடன் கூட்டணி வைத்திருப்பது துரோகக் கூட்டணி.. – டிடிவி கடும் பாய்ச்சல்

362

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யும் விதமாக, அதிமுகவினர் துரோகக் கூட்டணியை அமைத்துள்ளனர் என அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன் கடுமையாக தாக்கியுள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்;

அமமுக எதற்காகப் பதிவு செய்யப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். மேலும், பொதுச் செயலர் தலைமையிலான எங்களது அணியை, அதிமுகவின் ஒரு அணி என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

எங்களின் உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம். இந்த அணிக்கு மார்ச் 25-ஆம் தேதி, நாங்கள் எதிர்பார்க்கும் சின்னம் கிடைக்கும். இத்தேர்தலை மக்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.

மக்கள் யார் பக்கம் இருக்கின்றனர் என்பது மே 23-ஆம் தேதி தெரிந்து விடும். பலமான கூட்டணி எனக் கூறியவர்கள் ஆர்.கே. நகரில் டெபாசிட்டை இழந்தனர். திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அஞ்சினர். ஆர்.கே. நகர் தேர்தலில் முதல்வர் உள்பட 33 அமைச்சர்கள் தேர்தல் பணியாற்றினர்.

மக்கள் அவர்களைத் தோற்கடித்தனர். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யும் விதமாக, அதிமுகவினர் துரோகக் கூட்டணியை அமைத்துள்ளனர். இதற்கு, மக்கள் பதிலடி கொடுப்பார்கள். மற்றொரு கூட்டணி மாபெரும் தோல்வி அடையும். கருத்துக்கணிப்புகள் பொய் என்பதை மக்கள் நிரூபிப்பர்.

மேலும் பேசிய தினகரன் அதிமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. எல்லாம் இத்தேர்தலுடன் முடிந்துவிடும். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மார்ச் 22-ஆம் தேதி அறிவிக்கப்படுவர். அமமுக சார்பில் பிரசாரம் மார்ச் 27-ஆம் தேதி தொடங்கும் என்றார்.