நடிகர் ரஞ்சித் இணைந்திருப்பது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது – டிடிவி தினகரன்

845

நடிகர் ரஞ்சித் தங்களது கட்சியில் இணைந்தது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக வில் பாமக கூட்டணி வைத்ததால் பாமகவிலிருந்து  நடிகர் ரஞ்சித் விலகினார். இந்த நிலையில் திடீரென இன்று நடிகர் ரஞ்சித் அமமுக வில் இணைந்தார். டிடிவி தினகரன் இளைஞர்கள் எதிர்பார்க்கும் தலைவராக இருக்கிறார். சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு ஒரு சிறந்த தலைவராக டிடிவி தினகரன் இருப்பதால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தேன் என தெரிவித்தார்.

இந்த நிலையில் டிடிவி தினகரன் கூறுகையில் நடிகர் ரஞ்சித் தங்களின் கட்சியில் இணைந்தது இன்ப அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய அவர், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து சமூகங்களையும் அரவணைக்கும் பொருட்டு வேட்பாளர்களை அறிவிப்போம் என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of