டிடிவியை வெட்கப்படுத்திய சிறுமி!

340

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் தங்களது, கூட்டணி கட்சிகளை தேர்வு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அங்குள்ள சிறுமி ஒருவர், டிடிவி தினகரனிடம், நீங்க அழகா இருக்கீங்க, சூப்பரா இருக்கீங்க என்று தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட டிடிவி தினகரன் நிஜமாவா என்று வெட்கத்துடன் கேட்டுள்ளார். இதற்கு மீண்டும் பதிலளித்த சிறுமி, ஆமா நீங்க அழகா இருக்கீங்க, சூப்பரா இருக்கீங்க சீக்கிரம் சீ.எம் ஆகிடுங்க என்று கூறியுள்ளார்.

இந்த வீடியே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.