சுற்றுலா பயணிகளை ஈர்க்கத்தவரும் ‘துருக்மெனிஸ்தான்’

706

சுற்றுலா, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் துணைபுரியும் பல விஷயங்களில் ஒன்று. ஒரு நாட்டின் வளமை மற்றும் பெருமையை அந்த நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை வைத்து எளிதில் கூறலாம். கடந்த 2018ம் ஆண்டின் ஆய்வுப்படி சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர் நம் நாட்டை சுற்றிப்பார்க்க வந்துள்ளனர்.

ஆனால், சில நாடுகள் பிற நாடுகளை போல அதிகம் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில்லை, இதுபோன்று மிக குறைவான அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடுகளில் முதன்மையானது துர்க்மெனிஸ்தான், இது ஒரு மத்திய ஆசிய நாடு, காஸ்பியன் கடலின் எல்லையில் பெரும்பாலும் பாலைவனத்தால் மூடப்பட்டுள்ள ஒரு அழகிய நாடு. பழங்கால தொல்பொருள் இடிபாடுகளுக்கு பெரிதும் பெயர்போன நாடு. வருடத்திற்கு 500 முதல் 10,000 மக்கள் என்ற மிக குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

இப்படி குறைவான அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்பதால் இது அழகற்ற, அல்லது மிக குறைந்த சுற்றுலா தளங்களை கொண்ட நாடு என்ற அர்த்தமில்லை, மாறாக பல உள்நாட்டு பிரச்சினைகளாலும், சுற்றி பார்க்க மிகவும் விலைகொடுக்கவேண்டிய நாடு என்பதாலும் மட்டுமே இந்த நாடு உலகில் மிக குறைந்த சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடக திகழ்கிறது.

Gold Map

துர்க்மெனிஸ்தான் உலகில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சலவை கற்களால் ஆனா வெள்ளை நிற கட்டிடங்களை கொண்ட நாடு என்பதற்கான கின்னஸ் சாதனையை கொண்டுள்ளது. மேலும் இங்குள்ள கட்டிடம் ஒன்றில் இந்த நாட்டில் வரைபடம் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Buildings

நரகத்தின் வாசல் என்று அழைக்கப்படும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் எரிந்துகொண்டு இருக்கும் ஒரு மிகப்பெரிய பள்ளம் இந்த நாட்டில் தான் உள்ளது. ஆச்சர்யம் அடையவைக்கும் வகையில் இந்த நாட்டின் 92 விழுக்காடு மக்கள் அரசாங்க பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வாதிகார ஆட்சி முறையில் இந்த நாடு இருப்பதாலும், சுற்றுலா பயணிகளுக்கு மிக அதிக அளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாலும் மட்டுமே இந்த நாடு உலகில் மிக குறைந்த அளவு சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.